நயன்தாரா தற்போதெல்லாம் முன்னணி ஹீரோக்களே செய்ய தயங்கும் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி வருகின்றார். அந்த வகையில் இவர் தற்போது கொலையுதிர் காலம் என்ற படத்தில் நடித்து வருகின்றார்.
இப்படம் ஜனவரி மாதம் திரைக்கு வர, இதை பில்லா-2 இயக்குனர் சக்ரி தான் இயக்கியுள்ளார்.
இப்படம் முழுக்க லண்டனில் தான் எடுக்கப்பட்டதாம், ஒரு நாள் இரவு லண்டனில் மொழி தெரியாமல் கஷ்டப்படும் ஒரு பெண்ணின் கதை, அவள் என்ன கஷ்டங்களை சந்தித்து அதிலிருந்து மீண்டும் வருகிறாள் என்பதை செம்ம த்ரில்லராக எடுத்துள்ளார்களாம்.