ஜனவரி 3 ஆம் திகதி இலங்கை – இந்திய போட்டித் தொடர்

148

இலங்கை அணிக்கும் இந்திய அணிக்கும் இடையிலான 20/20 மற்றும் ஒரு நாள் கிரிக்கெட் போட்டித் தொடர் ஜனவரி 3 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

இந்தியாவில் நடைபெறும் இந்தப் போட்டித் தொடரில் மூன்று 20/20 போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் இடம்பெறவுள்ளன.

இந்த போட்டியில் இந்திய அணியின் தலைவர் ரோகித் சர்மா பங்கேற்க மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயம் காரணமாக கடந்த பங்களாதேஷ் சுற்றுப்பயணத்தில் அவர் பங்கேற்கவில்லை.

இதனிடையே, இந்திய அணியின் கே.எல். ராகுலும் அணியில் இருந்து நீக்கப்படுவார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆசிய கிண்ணம் உட்பட 16 போட்டிகளில் 6 அரைசதம் மட்டுமே அடித்ததன் அடிப்படையில் இந்த தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. – ada derana

SHARE