ஜனாதிபதிக்கும் பிரசன்ன ரணதுங்கவுக்கும் இடையில் சந்திப்பு

202
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்காக முன் நின்று செயற்படுகின்ற கம்பஹா மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க சமீபத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துள்ளதாக அரசியல் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஜனாதிபதிக்கு நெருங்கிய ஒருவரின் தலையீட்டில் இச் சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக குறித்த தகவல் வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

கொழும்பு ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இச் சந்திப்பு 30 நிமிடங்கள் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதன் போது கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்ட விடயங்கள் தொடர்பில் தகவல் வெளியாகவில்லை.

பிரசன்ன ரணதுங்க மேல் மாகாண முதலமைச்சராக செயற்பட்ட காலத்தில் கொலொன்னாவை, மீதொட்ட முல்ல வீதி இலக்கம் 251/9 இடத்தில் அமைந்துள்ள 2 ஏக்கர் 8 பெர்சஸ் காணியில் அங்கீகாரம் பெறாதகுடியிருப்பாளர்களை வெளியேற்றுதற்காக இலஞ்சம் பெற்றுகொள்ளப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் அனைத்து விசாரணை நடவடிக்கைகளும் நிறைவடைந்துள்ளதாகவும் குற்றவாளியை கைது செய்து வழக்கு தொடுக்கும் நடவடிக்கை மாத்திரமே மீதமாக உள்ளதென தெரியவந்துள்ளது.

இவ் இலஞ்சம் பெற்று கொள்ளும் சம்பவத்திற்கு பிரசன்ன ரணதுங்கவின் மனைவி தொடர்புபட்டிருப்பதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE