தற்போதைய அனர்த்த நிலைமை தொடர்பாக ஆராய்தல், மற்றும் அனர்த்தத்திற்கு உள்ளானவர்களுக்கு விரைவாக நிவாரணம் வழங்குவது தொடர்பில் ஒருங்கிணைப்பதற்கான உயர்மட்டக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் செயலாளர் எஸ்.எஸ்.மியனவலகேவின் தலைமையில் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான கலந்துரையாடல் நேற்று பிரதமர் தலைமையில் நாடாளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது நிவாரண பணிகளை துரிதமாக முன்னெடுப்பது தொடர்பாக அதிக நேரம் கலந்துரையாடப்பட்டதாக பிரதமர் காரியாலயம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
இதேவேளை, எந்தவொரு அரச துறை அதிகாரிகளாலும் சோதனை செய்யப்படாத அனர்த்தத்திற்கு உள்ளான இடங்கள் தொடர்பாக ஜனாதிபதிக்கு அறிவிக்கும் திட்டத்திற்கு 1200 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
1919 என்ற தொலைபேசி இலக்கங்கள் ஊடாக இந்த முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவத்துள்ளது.
இவ்வாறு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் தொடர்பாக ஜனாதிபதி செயலாளரின் நேரடி ஆலோசனைக்கு அமைய குறித்த பிரிவுகளுக்கு அறிவுறுத்தப்பட்டு நிவாரண நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.