ஜனாதிபதியின் அழைப்பை ஏற்று நாடு திரும்பிய ஊடகவியலாளர் கைது

228
ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் இலங்கைக்கு வரும் வெளிநாடுகளில் அடைக்கலம் கோரியுள்ள அகதிகள் நாடு திரும்பும் போது பாதிக்கப்படுகிறார்கள் என்று சட்டத்தரணி சேனக பெரேரா தெரிவித்துள்ளார்

மட்டக்களப்பை சேர்ந்த சசிகரன் புண்ணியமூர்த்தி கடந்த 20ம் திகதியன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டமை தொடர்பிலேயே சட்டத்தரணியின் இந்த கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னைய அரசாங்கத்தின் வெள்ளைவான் பயத்தால் 4 வருடங்களுக்கு முன்னர் சசிகரன் படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்கு தப்பிச்சென்றார்.

இந்தநிலையில் அவரால் அன்றைய காலகட்டத்தில் சட்டரீதியாக அவுஸ்திரேலியாவுக்கு சென்றிருக்க வாய்ப்பில்லை. எனவேதான் அவர் சட்டவிரோதமாக படகு மூலம் அவுஸ்திரேலியா சென்றுள்ளார்.

இதனையடுத்து சில மாதங்களுக்கு முன்னர் அவருக்கு அவுஸ்திரேலியாவில் நிரந்தர விசா கிடைத்ததும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அழைப்புக்கு இணங்க சசிகரன் இலங்கை வந்துள்ளார். எனினும் அவர் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளார். உரிய கடவுச்சீட்டை கொண்டிருக்கவில்லை என்ற குற்றச்சாட்டே அவர் மீது சுமத்தப்பட்டுள்ளது.

எனவே இந்த விடயத்தில் சர்வதேச மனித உரிமை நிறுவனங்கள் உரிய கவனத்தை செலுத்த வேண்டும் என்று சட்டத்தரணி கோரிக்கை விடுத்துள்ளார்.

 

கட்டுநாயக்கவில் கைதான ஊடகவியலாளர் பிணையில் விடுதலை
குடிவரவு, குடியகல்வு சட்டங்களை மீறிய குற்றத்தில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட தமிழ் ஊடகவிலாளருக்கு நிபந்தனை அடிப்படையில் பிணை வழங்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவில் இருந்து நாடு திரும்பிய கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த குறித்த தமிழ் ஊடகவிலாளர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து நேற்று வியாழக்கிழமை அதிகாலை கைதுசெய்யப்பட்டிருந்தார்.

ஸ்ரீலங்காவின் குடிவரவு குடியகல்வு சட்டங்களை மீறியமை தொடர்பில் கைதான குறித்த ஊடகவிலாளர் கடவுச்சீட்டு பறிமுதல் செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2012 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் ஸ்ரீலங்காவில் இருந்து சட்டவிரோதமாக படகு மூலம் அவர் அவுஸ்திரேலியாவிற்கு சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நாடு திரும்பிய குறித்த ஊடகவிலாளரை கைதுசெய்த குடிவரவு குடியல்வு அதிகாரிகள், அவரை குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் கையளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

sasitharan

SHARE