ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தை முடக்கி, போலியான தகவல்களை பிரசுரித்த சம்பவம் தொடர்பில், சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட மாணவர் நன்னடத்தை மாணவரை பராமரிப்பு மையத்திற்கு ஒப்படைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
அவரை கொழும்பு பிரதான நிதவான் கிஹான் பிலபிடியவிடம் இன்று முன்னிலைப்படுத்திய போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் , சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 26 வயதுடைய நபர் எதிர்வரும் செப்டம்பர் மாதம் இரண்டாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தை முடக்கி, போலியான தகவல்களை பிரசுரித்த சம்பவம் கடந்த வௌ்ளிக்கிழமை இடம்பெற்றிருந்தது.
பின்னர் குற்றப்புலனாய்வு திணைக்களம் அதனுடன் தொடர்புடைய விசாரணைகளை ஆரம்பித்த நிலையில் , கடுகண்ணாவை பிரதேசத்தை சேர்ந்த குறித்த மாணவர் மற்றும் அவருக்கு உதவிய குற்றத்தின் பேரில் மொரட்டுவை பிரதேசத்தை சேர்ந்த மற்றைய இளைஞர் கைது செய்யப்பட்டார்.