சாட்சியாளர்களை பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் கடற்படை லெப்டினன்ட் கொமாண்டர் கே.பீ.வெலகெதரவுக்கு உடனடியாக பாதுகாப்பு வழங்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடற்படைக்கு உத்தரவிட்டிருந்தார்.
ஜனாதிபதி உத்தரவிட்டுள்ள போதும் இதுவரையிலும் அது செயற்படுத்தப்படவில்லை என கடற்படை தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கப்பமாக பணம் பெற்றுக் கொள்ளும் நோக்கில் பல இளைஞர்களை கடத்திச் சென்று கொலை செய்தமை தொடர்பில் பல சிரேஷ்ட கடற்படை அதிகாரிகள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்தக் குற்றச்சாட்டுக்களை நிரூபிக்கக் கூடிய பிரதான சாட்சியாளராக கே.பீ.வெலகெதர உள்ளார்.
இதனால் வெலகெதரவுக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும், அவருக்கு தனிப்பட்ட பாதுகாப்பு வழங்குமாறு ஜனாதிபதி இதற்கு முன்னர் கடிதம் மூலம் கடற்படையினருக்கு உத்தரவிட்டிருந்தார்.
எனினும் அந்த உத்தரவை இதுவரையிலும் செயற்படுத்தப்படாமையினால் கடற்படை லெப்டினன்ட் கமாண்டர் வெலகெதரவின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.