ஜனாதிபதியின் செயலாளர் நிலைக்கு புதிய நியமனம்

277

 

தற்போதைய ஜனாதிபதி செயலாளராக பதவி வகிக்கும் பி.பி.அயபகோன் ராஜதந்திர பதவி ஒன்று வழங்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து மகாவலி அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகமாக கடமையாற்றும் அனுர திஸாநாயக்க, ஜனாதிபதி செயலாளராக பதவியேற்கவுள்ளார்.

ஜனாதிபதி செயலாளராக பதவியேற்கும் முன்னர் அபயகோன், மஹிந்த ராஜபக்சவின் ஆட்சியில் உள்துறை அமைச்சின் செயலாளராக பதவி வகித்தார்.

இந்தநிலையில் பதவி மாற்றம் குறித்து அபயகோனின் கருத்தை அறிய முயற்சித்த போதும் அவரை தொடர்பு கொள்ளமுடியவில்லை.

SHARE