ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நியூயோர்க் விஜயத்திற்கு 90 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட தரப்பினர் நியூயோர்க் விஜயம் செய்திருந்தனர்.
இந்த விஜயத்திற்கான செலவுகளை ஈடு செய்ய பாராளுமன்றின் அனுமதி கோரப்பட்டுள்ளது.
இதற்கு மேலதிகமாக அரசாங்க முகவர் நிறுவனங்களுக்கு வாகனங்களை கொள்வனவு செய்ய 1.3 பில்லியன் ரூபா தேவைப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிதாக நிறுவப்பட்டுள்ள ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் செலவுகளுக்காக 18 மில்லியன் ரூபா நிதி தேவைப்படுவதாக குறைநிரப்பு பிரேரணையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
புதிய அமைச்சுக்களில் உருவாக்கப்பட்டுள்ள பதவிகளில் நியமிக்கப்பட்டவர்களுக்கு சம்பளங்களைக் கொடுக்கவும் பல பில்லியன் ரூபா செலவிடப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.