ஜனாதிபதியின் ஹெலிகொப்டரினால் மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு

108

ஹாலிஎல நகரத்தில் அமைந்துள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊவா மாகாண அலுவலகம் மற்றும் வள மத்திய நிலையம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இதனை திறப்பதற்காக ஜனாதிபதி வருகைத்தந்த ஹெலிகொப்டரை தரையிறக்கும் போது, அதிலிருந்து வீசிய காற்று காரணமாக அங்கிருந்த வீடுகளின் கூரைகள் பறந்துள்ளன. இதனால் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அந்த ஹெலிகொப்டர் தரையிறக்கப்பட்ட மைதானத்திற்கு அருகில் உள்ள ஆயுர்வேத மருந்து நிலையம் ஒன்றின் கூரையே இவ்வாறு சேதமடைந்துள்ளதாக ஆயுர்வேத மருத்துவர் லலிதா ரஞ்ஜனி குற்றம் சுமத்தியுள்ளார்.

ஹெலிகொப்டரை தரையிறக்கும் போது வீசிய காற்று காரணமாகவும், இதனால் ஏற்பட்ட தூசி காரணமாகவும், தனது மருந்து நிலைய கூரைக்கு சேதம் ஏற்பட்டு நிலையத்திற்குள் தூசி நிறைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதன்போது 10 பேர் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்தாகவும், இது தொடர்பில் உரிய பிரிவுகளுக்கு அறிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

SHARE