ஜனாதிபதியையும் எதிர்க்கட்சித் தலைவரையும் இந்தியாவிற்கு அழைத்தமை அரசியல் ரீதியாக முக்கியமானது-எம்.ஏ.சுமந்திரன்

220

fdfd

ஜனாதிபதியையும் எதிர்க்கட்சித் தலைவரையும் இந்தியாவிற்கு அழைத்தமை அரசியல் ரீதியாக முக்கியமானது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்  எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற கும்பமேலா மத வழிபாட்டு நிகழ்வில் பங்கேற்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்திருந்தார்.
இந்த அழைப்பினை ஏற்றுக்கொண்டு இருவரும் இந்தியாவிற்கு விஜயம் செய்திருந்தனர்.
அதிகார அடிப்படையில் இருவரும் ஒரே நிலையைக் கொண்டில்லாத போதிலும் தமிழ் மக்களின் தலைவர் ஒருவரை அழைக்க வேண்டுமெனக் கருதி சம்பந்தனுக்கும் அழைக்கப்பட்டமை முக்கியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சம்பந்தனுக்கு மத்திய பிரதேச முதலமைச்சர் அழைப்பு விடுத்த போதிலும், அது நரேந்திர மோடியின் சார்பில் விடுக்கப்பட்ட அழைப்பாகும் என அவர் தெரிவித்துள்ளார்.
நரேந்திர மோடி பதவிப் பிரமாணம் செய்து கொண்டது முதல் இலங்கைத் தமிழ் மக்களின் நலன்களில் கரிசனை காட்டி வருகின்றார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

SHARE