ஜனாதிபதி அதிகாரங்கள் கூறுவது என்ன?

823

 

1384529073104.cached

சர்வாதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சிமுறையே இலங்கைத்தீவில் பயன்படுத்தப்படுகிறது. இதற்கு காரணகர்த்தாவாக இருந்தவர் ஜே.ஆர்.ஜெயவர்த்தனா அவர்கள். அதன்பின்னரான ஆட்சியாளர்களைப் பொறுத்தவரையில், ஜே.ஆரின் கொள்கைகளை ஆதாரமாக எடுத்துக்கொண்டு அதிகாரங்களை துஷ்பிரயோகம் செய்துவருகின்றனர். ஜனாதிபதியின் அதிகாரங்களைப் பற்றிப் பார்க்கின்றபொழுது அவை என்ன கூறுகின்றன?

asgriya Chapter MR

1947 ஆம் ஆண்டு முதல் 1977 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் இலங்கையில் நடைமுறையில் இருந்ததும் மக்கள் வாழ்க்கையில் நன்கு பரீட்சயமானதுமான பாராளுமன்ற ஆட்சிமுறையை நீக்கிவிட்டு 1978 ஆம் ஆண்டு அரசியல் அமைப்பின் கீழ் நிர்வாக விடயங்களை மேற்கொள்வதற்காக ஏற்படுத்தப்பட்ட ஏற்பாடே நிறைவேற்று ஜனாதிபதித்துவ ஆட்சி முறையாகும். 1947 முதல் 1977 ஆம் ஆண்டு வரை இலங்கையில் பாராளுமன்ற ஆட்சி நில வியதால் நாட்டின் நிர்வாகம் உண்மை நிர்வாகம், நாம நிர்வாகம் என இரண்டாக வகைப்படுத்தப்பட்டிருந்தது. இவற்றில் பெயரளவு நிர்வாகியாகவே ஜனாதிபதி காணப்பட்டார்.

1972 ஆம் ஆண்டு அரசியல் அமைப்பின் படி ஜனாதிபதி பிரதமரின் சொல்லுக்கும், செயலுக்கும் கட்டுபட்டு நடந்தமையினால் நாடு பொருளா தார ரீதியாக பல பிரச்சினைகளை எதிர்நோக்குவதாகக் கூறி ஐக்கிய தேசிய கட்சியினர் சட்டதுறைக்கு அப்பாற்பட்டு சுதந்திரமாக செயற்படக்கூடிய ஒருவரை நிறைவேற்றுத்துறைக்கு பொறுப்பாக நியமிக்க முன் வந்தனர். அவ்வாறு நியமிக்கப்பட்டவரே ஜனாதிபதியாவார்.

1947 ஆம் ஆண்டு முதல் 1977 ஆம் ஆண்டு வரை நிர்வாக துறையானது சட்டத்துறையின் கெடுபிடிகளுக்கும் கட்டுப்பாட்டுக்கும் உட்பட்டே செயற்பட வேண்டியிருந்தது. எனவே இத்தகைய தன்மையை நீக்கி சட்டத்துறையின் கட்டுப்பாடுகளுக்கு உட்படாது தன்னிச்சையாக செயற்படக்கூடிய நிர்வாகத் துறையை ஏற்படுத்தும் முகமாக ஜனாதிபதித்துவ ஆட்சி ஏற்படுத்தப்பட்டது. இது தொடர்பான ஏற்பாடுகள் அரசியலமைப்பில் 07ஆம் அத்தியாயத்தில் 30-41 வரையான உறுப்புரைகளில் இடம்பெற்றுள்ளன.

30 ஆம் உறுப்புரைகளில் இலங்கைக்கு நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி ஒருவர் இருத்தல் வேண்டும் எனவும் அவரே ஆட்சிதுறையின் தலைவராகவும், அரசின் தலைவராகவும், முப்படைகளின் தளபதியாகவும் விளங்குவார் என்றும் இவர் 06 ஆண்டுகள் பதவி வகிக்கவென விகி தாசார பிரதிநிதித்துவத்தின் தனிமாற்று வாக்கு முறை மூலம் மக்களால் நேர டியாக தெரிவு செய்யப்பட வேண்டும் என யாப்பு விதி கூறுகிறது.

அரசியல் அமைப்பின் 31 ஆம் உறுப்புரையில் ஜனாதிபதிக்கு இருக்கவேண்டிய தகை மைகள் தொடர்பாக கூறப்பட்டுள்ளது.

a699d2caf32e3131a9c765c05bb85999
இலங்கை பிரஜையாக இருத்தல் வேண்டும். 30 வயதைக் கடந்தவராக வேண்டும்.
இரண்டு தடவைகளுக்கு மேல் மக்களால் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படாதவராக இருக்க வேண்டும்.
(இவ்விதி அரசியல் அமைப்பின் 18ஆம் சீர்திருத்தத்தினூடாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஒருவர் தற்போது எத்தனை தடவை வேண்டுமானாலும் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படலாம்.)

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் தலைவராகவோ அல்லது பாராளுமன்ற உறுப்பினராகவோ அல்லது ஏற்கனவே பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவராகவோ இருத்தல் வேண்டும். (பட்டியலில் வாக்காளராக தகுதி பெற்ற எவரும் ஜனாதிபதியாக போட்டியிடலாம்)

குற்றம் செய்ததற்கான தண்டனை பெறா தவராக இருத்தல் வேண்டும். புத்தி சுயாதீனம் உடையவராக இருத்தல் வேண்டும். ஜனாதிபதி வேட்பாளர் அரசி யல் கட்சி ஒன்றினூடாக போட்டியிட்டால் 50000 ரூபாவையும், சுயேட்சையாகப் போட்டியிட்டால் 75000 ரூபாவையும் கட்டுப்பணமாக செலுத்த வேண்டும்.

ஜனாதிபதி தேர்தல் முறை (94ம் சரத்து)
1978ஆம் ஆண்டு அரசியலமைப்பின் படி ஜனாதிபதியானவர் மக்களால் விகி தாசார பிரதிநிதித்துவத்தின் தனிமாற்று வாக்குரிமையினூடாக தெரிவு செய்யப்படுகின்றார். ஜனாதிபதி தேர்தலின் போது முழு இலங்கையும் ஒரே தேர்தல் தொகுதியாக கணிக்கப்பட்டு வாக்கெடுப்பு நடைபெறும்.

தேர்தலின் போது இருவர் மாத்திரம் போட்டியிட்டால் ஒரு வாக்காளருக்கு ஒரு வாக்கு மட்டுமே வழங்கப்படும். மூவர் போட்டியிட்டால் ஒரு வாக்காளருக்கு ஒரு வாக்கும் ஒரு விருப்பு வாக்கும் வழங்கப்படும். மூன்று பேருக்கு மேல் போட்டியிட்டால் ஒரு வாக்காளருக்கு ஒரு வாக்கும் இரண்டு விருப்பு வாக்குகளும் வழங்கப்படும்.

தேர்தலில் வாக்காளர் தனது முத லாம் வாக்கினை மட்டும் வழங்கி விட்டு இரண்டாம், மூன்றாம் விருப்பு வாக்குகள் மாத்திரம் அடையாளப்படுத்தப்பட்டுள்ள வாக்கு சீட்டானது வாக்கொன்றை அடையாளப்படுத்தாமை காரணமாக நிராகரிக்கப்படலாம்.

ஜனாதிபதி தேர்தலின் போது பின்வருமாறு வாக்களிப்பினை மேற்கொள்ளலாம்.
01 என்ற இலக்கத்தினை அடையாளமி டுவதன் மூலம் வேட்பாளர் ஒருவருக்கு தமது வாக்கினை அளிக்க முடியும், 02 என்ற இலக்கத்தை அடையாளமிடுவதன் ஊடாக தமது 02ஆம் விருப்பினையும் 03 என்ற இலக்கத்தை அடையாளமிடுவதன் ஊடாக தமது 3ஆம் விருப்பினையும் அளிக்க முடியும்.

வாக்காளர் ஒருவர் தமது வாக்கினை மாத்திரம் அளிக்க முனைவாராயின் வாக்கு சீட்டில் புள்ளடியிட்டு(ஓ) தமது வாக்கினை அளிக்க முடியும், வாக்கு சீட்டொன்றில் ஒரு வாக்காளன் அதிகப்படியான வாக்குகளை அளித்திருந்தால் அவ்வாக்கு சீட்டு நிராகரிக்கப்பட்டதாக கணிக்கப்படும், ஜனாதிபதி தேர்தலானது பதவியில் இருக்கும் ஜனாதிபதியின் பதவிக்காலம் முடிவதற்கு ஒரு மாதத்துக்கு முன்னர் அல்லது பதவிக்காலம் முடிந்து இரண்டு மாதங்களுக்கு இடையில் நடத்தப்படலாம், வாக்கு கணிப்பீட்டின் போது 50.1மூ வாக்கை பெற்றவர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவார்.

மூன்று வேட்பாளர்களுக்கு மேல் போட்டியிடுகின்ற போது எவரும் அரு திப் பெரும்பான்மை பெற முடியாது போகலாம். அவ்வாறான வேளையில் வேட்பாளர்களுள் அதிகூடுதலான வாக்குளைப் பெற்ற இருவர் மாத்திரம் போட்டிக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு ஏனையோர் போட்டியில் இருந்து நிராகரிக்கப்படுவர்.

நீக்கப்பட்டவர்களின் பட்டியலில் காணப்படுகின்ற இரண்டாம் விருப்பு வாக்குகள் வாக்கு கணிப்பீட்டிற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்களின் வாக்குகளோடு சேர்த்து கொள்ளப்படும். அப்போது அருதிப் பெரும்பான்மை பெறாத சந்தர்ப்பத்தில் நீக்கப்பட்டவர்களின் மூன்றாம் விருப்புத்தெரிவுகள் சேர்த்துகொள்ளப்படும். அப்போதும் அரு திப் பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில் திருவுள சீட்டொன்றின் மூலமாக ஜனாதிபதி தெரிவுசெய்யப்படுவார். இதுவரை இலங்கையில் நடைபெற்ற தேர்தல்களில் முதல் வாக்கு கணிப்பீட்டிலேயே 1982-52.7, 1988-50.4, 1994-62.2, 1999-51.9, 2005-50.3, 2010-57.0
என்ற ரீதியில் வாக்குளைப் பெற்று கொண்டமையினால் இரண்டாம் கட்ட வாக்கு கணிப்பீடுகள் எதுவும் நடைபெறவில்லை. இவ்வாறு தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி உயர் நீதிமன்ற பிரதம நீதியரசர் முன்னிலையில் சத்தியப்பிரமானம் செய்து தமது பதவியை பொறுப்பேற்பார்.

a_Rajapaksh101
ஜனாதிபதி அதிகாரங்கள்

1978ஆம் ஆண்டு யாப்பின் படி ஏற்படுத்தப்பட்ட ஜனாதிபதித்துவ ஆட்சி முறையானது தனி ஒரு நாட்டின் நிர்வாக அதிகாரங்களை ஒப்படைத்ததாக அமைகின்றது. இந்நிர்வாக துறையா னது சட்டதுறையின் கெடுபிடிகளுக்கு அப்;பாற்பட்ட தன்னிச்சையாகவும், சுதந்திரமாகவும் செயற்படக்கூடிய நிறைவேற்று அதிகாரத்தை உடைய தாக காணப்படுகின்றது. நிறைவேற்று நிர்வாகி எனும் ரீதியில் இவரின் அதிகாரங்கள் மேலோங்கியுள்ளன. ஜனாதிபதி நிர்வாகத்துக்கு பொறுப்பாக்கப்பட்டிருந்தாலும் அவர் சட்டம், நிர்வாகம், நீதி, பாதுகாப்பு என பல்துறை அதிகாரங்களை கொண்டவராக காணப்படுகின்றார்.

சட்டதுறை அதிகாரங்கள்
பாராளுமன்ற முதற் கூட்டத் தொடரின் போது கொள்கை பிரகடன உரையை வாசித்தல். பாராளுமன்ற சடங்கு முறை யான இருக்கைக்கு தலைமை தாங்குதல், பாராளுமன்ற உறுப்பினரல்லாவிட்டாலும் பாராளுமன்றத்திற்கு செல்லவும் உரையாற்றவும் தமது வேண்டுகோளை நிறைவேற்றித் தரும்படி கேட்டு கொள்ளவும் அதிகாரம் உடையவராவார்.

பாராளுமன்ற வரப்பிரசாதங்கள் அனைத்தும் இவருக்கும் உரித்துடையதாகும், பாராளுமன்றத்தைக் கூட்டுதல், கலைத்தல், ஒத்திவைத்தல் போன்ற அதி காரம் காணப்படினும் பாராளுமன்றத்தைக் கலைக்கும் போது 70 சரத்தின் (அ,ஆ,இ,ஈ) ஆகிய உப பிரிவுகளை அனுசரித்தே இப்பணியை மேற்கொள்ள வேண்டும்.

70(அ)உபபிரிவு
பாராளுமன்ற தேர்தல் நடைபெற்று ஒரு வருட காலத்தினுள் பாராளுமன்றம் கேட்டு கொண்டாலே ஒழிய அதனை கலைக்க முடியாது.
70(ஆ)உபபிரிவு
ஜனாதிபதியால் வாசிக்கப்படும் கொள்கை பிரகடன உரை தோல்வியடைந்தாலும் பாராளுமன்றம் கலைக்க வேண்டியதில்லை.
70(இ)உபபிரிவு
பாராளுமன்றில் ஜனாதிபதிக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் போது பாராளுமன்றத்தைக் கலைக்க முடியாது.
70(ஈ)உபபிரிவு
பாராளுமன்றில் வரவு – செலவு திட்டம் தோல்வியடைந்தாலும் பாராளுமன்றம் கலைக்கப்படலாகாது இரண்டாம் முறை யும் வரவு – செலவு தோல்வியடைந்தால் பாராளுமன்றம் கலைக்கப்படல் வேண்டும்.

பாராளுமன்றத்தால் நிராகரிக்கப்பட்ட ஒரு விடயத்தை தேசிய முக்கியத்துவம் மிக்கது எனக்கூறி மக்கள் தீர்ப்புக்கு விட்டு சட்டமாக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு, பாராளுமன்றச் செயலா ளர் நாயகத்தை நியமித்தல், சட்டமா அதிபரை நியமித்தல், தான் விரும்பிய போது பாராளுமன்றத்திற்கு சென்று உரையாற்றுதல்.

நிர்வாகத் துறை அதிகாரங்கள்
1978ஆம் ஆண்டு அரசியலமைப்பின்படி ஜனாதிபதியானவர் அரசின் தலைவரா கவும், ஆட்சி துறையில் தலைவராகவும், ஆயுதம் தாங்கிய முப்படைகளின் தலை வராகவும் காணப்படுவாரென யாப்பு கூறுகிறது. அவ்வகையில் நிறைவேற்றுத் துறையில் முழுமையான அதிகாரம் பெற்றவராக ஜனாதிபதி காணப்படுகிறார்.

பிரதமரை நியமித்தல். (பிரதமரை நியமிக்கும் போது தனக்கு நம்பிக்கையான ஒருவரையோ, கட்சியில் நம்பிக்கைமிக்க ஒருவரை பிரதமராக நியமிக்கலாம்)
44ம் சரத்தின் படி 01ம் உபபிரிவின் படி அமைச்சர்களை நியமிக்கும் அதிகாரம் இவருக்கு உண்டு.
44(2) உபபிரிவின் படி தான் விரும்பிய பொழுது அமைச்சரவையை கலைக்கலாம்.
நியமிக்கப்பட்ட அமைச்சரவையில் எவரையும் தமது அதிகாரத்தினூடாக, அரசியலமைப்பின் 47ம் சரத்தை பயன்படுத்தி பதவியிலிருந்து நீக்கலாம். இவ் அதிகாரத்தை பயன்படுத்தியே 2007.02.09ம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் மங்கலசமரவீர, ஸ்ரீபதி சூரியராச்சி, அனுரபண்டார நாயக்க போன்றோரின் பதவிகளை தாம் பொறுப்பேற்றார்.

அமைச்சர்களுக்கான இலாகாக்களை ஒப்படைத்தல், அமைச்சரவையில் தலை வராக செயற்படல், உயர் நிர்வாக திணைக்களத் தலைவர்களை நியமித்தல், உள்நாட்டு, வெளிநாட்டு தூதுவர்களை நியமித்தல், வெளிநாடுகளுடன் நிர்வாக ஒப்பந்தங்களை செய்தல், குறைகேள் அதிகாரியை நியமித்தல், பகிரங்க சேவை ஆணைக்குழுவை நியமித்தல், அமைச்சுக்களின் செயலாளர்களை நியமித்தல், அமைச்சர்களின் எண்ணிக்கையை தீர்மானித்தல்.

நீதித்துறை அதிகாரங்கள்
பிரதம நீதியரசரை நியமித்தல், உயர் நீதிமன்ற நீதிபதிகளை நியமித்தல், நீதிச்சேவை ஆணைக்குழு உறுப்பினர்களை நியமித்தல், குற்றவாளிகள் விடயத்தில் தலையிடல்.
(உதாரணம் :- 2010ம் ஆண்டில் சிறையிடப்பட்ட முன்னாள் இராணுவத் தளபதி சரத்பொன்சேகா அவர்களை அரசியல் அமைப்பில் 34ம் சரத்தில் தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தினை பயன்படுத்தி 21.05.2012 அன்று பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்தார்.)

பாதுகாப்பு துறை அதிகாரங்கள்
முப்படைகளின் தளபதிகளை நியமித்தல், பாதுகாப்பு அமைச்சராக விளங்குதல், அல்லது பாதுகாப்பு அமைச்சரை நியமித்தல், பாதுகாப்பு அமைச்சின் செயலாளரை நியமித்தல், பாதுகாப்பு அமைச்சுக்குள் உள்ளடக்க வேண்டிய விடயங்களை தீர்மானித்தல். (2010ம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்ட அமைச்சரவையில் பாதுகாப்பு அமைச்சுக்குள் மிக முக்கியமான 21 துறை கள் சேர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது)
12 ஆம் பக்கம் பார்க்க…

போர், சமாதான பிரகடனங்களை மேற்கொள்ளல், வெளிநாடுகளுடன் பாதுகாப்பு உடன்படிக்கையில் கைச்சாத்திடல், அவரக்கால ஊரடங்கு சட்டம் பிறப்பித்தல், வெளிநாடுகளுடன் போர் பிரகடனம் மேற்கொள்ளல்.

ஜனாதிபதியின் பதவி வெற்றிடமாதல்(38ஆம் சரத்து)
1978ஆம் ஆண்டு யாப்பின்படி அரசியலமைப்பின் 38(1) உபபிரிவு ஜனாதிபதியின் பதவி வரிதாகக் கூடிய சந்தர்ப்பங்கள் தொடர்பான வாசகங்கள் இடம் பெறுகின்றன. இதன் படி பின்வரும் சந்தர்ப்பங்களில் ஜனாதிபதியின் பதவி வெற்றிடமாகும்.

பதவி காலத்தின் போது இறந்தால், தன் கைப்பட எழுதிய இராஜினாமா சமர்ப்பிப்பதன் மூலம், இலங்கை பிரஜை என்ற அந்தஸ்தை இழக்கும் போது, தெரிவாகி ஒரு மாதத்துக்கு மேல் பதவியை பொறுப்பேற்காத போது,
இவரின் தெரிவு செல்லுபடியற்றது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளிக்கும்போது, ஜனாதிபதிக்கு எதிராக பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட குற்றப் பிரேரணையொன்று நிறைவேற்றப்படும் போது, ஜனாதிபதிக்கு எதிரான குற்றப் பிரேரணை கொண்டு வரக்கூடிய சந்தர்ப்பங்கள் 38(02) குறிப்பிடப்பட்டுள்ளது.

உடல், உள பலவீனங்களின் காரணமாக பதவியை பொறுப்பேற்க முடியாதென கருதுகின்ற போது, வேண்டுமென்றே அரசியலமைப்பை மீறுகின்ற குற்றச்சாட்டு, தேசத் துரோக குற்றம் விளைவித்தல், பதவிக்குரிய துஷ்பிரயோகம் செய்தல்.

mahinda

இலஞ்சம், ஊழல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடல், ஒழுக்க கேடான நடவடிக்கைகளில் ஈடுபடல், இதுபோன்ற ஏதாவதொரு குற்றசாட்டினை மனுவாக தயாரித்து மொத்த பாராளுமன்ற உறுப்பினர்களுள் 2ஃ3 கையொப்பங்களைப் பெற்று சபாநாயகரிடம் சமர்ப்பித்தால் குறித்த விடயம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும், பிரேரணையில் அரைவாசிப்பேர் மாத்திரம் கையொப்பமிட்டு இருந்தால் குறித்த பிரேரணையை விசாரணைக்காக எடுப்பதா? இல்லையா? என்பதை தீர்மானிக்கும் அதிகாரம் சபாநாயகருகே உண்டு.

 

SHARE