ஜனாதிபதி ஆணைக்குழு முன் வவுனியாவில் 163 பேர் சாட்சியமளிப்பு: 79 பேர் புதிதாக விண்ணப்பம்

267

காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் நேற்றும் இன்றும் வவுனியா பிரதேச செயலகத்தில் இடம்பெற்று வருகிறது.

மெக்ஸ்வெல் பரணகம தலைமையில் நடைபெறும் இவ் ஆணைக்குழுவின் விசாரணையில் நேற்று 311 பேருக்கு சாட்சியமளிக்க அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் 163 பேர் சாட்சியமளித்தனர்.

புதிதாக 79 பேர் காணாமல் போனமை தொடர்பில் விண்ணப்பங்களைப் பெற்று பதிவு செய்துள்ளனர்.

இதேவேளை, இன்றைய தினம் சாட்சியமளிப்பதற்கு 218 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

SHARE