முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவின் மனைவி மற்றும் மகள் ஆகியோர் பாரிய நிதி மோசடிகள் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவில் பிரசன்னமாகத் தவறியுள்ளனர்.
பசில் ராஜபக்சவின் மனைவி புஸ்பா ராஜபக்சவை நேற்றும் அவரது மகள் தேஜானி ராஜபக்சவை இன்றும் ஆணைக்குழுவின் எதிரில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
வாக்கு மூலமொன்றை பெற்றுக் கொள்வதற்காக இவ்வாறு இருவருக்கும் ஆணைக்குழு அழைப்பு விடுத்திருந்தது.
புஸ்பா ராஜபக்ஸ மற்றும் தேஜானி ராஜபக்ச ஆகியோர் வெளிநாடு சென்றுள்ள காரணத்தினால் விசாரணைகளில் முன்னிலையாகத் தவறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மெதமுலன வீட்டில் உள்ள பொலிஸ் பாதுகாவலர்கள் இருவரினதும் வெளிநாட்டுப் பயணம் தொடர்பில் ஆணைக்குழுவிடம் தெரிவித்துள்ளனர்.
எனவே வேறு ஒர் நாளில் இருவரிடமும் விசாரணை நடத்த ஆணைக்குழுத் தீர்மானித்துள்ளது.
முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவிற்கு எதிராக பாரியளவில் நிதி மோசடி மற்றும் அதிகார துஸ்பிரயோகம் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.