ஜனாதிபதி இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்கு திடீர் விஜயம்

668

“சுபாரதி” நேரடி அரசியல் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று காலை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்கு நேரடியாக விஜயம் மேற்கொண்டார்.

ஜனாதிபதியாக பதவியேற்று ஓராண்டு பூர்த்தியாகும் நிலையில், மிகவும் எளிமையாக சாதாரண உடையில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்கு காலை 7 மணியளவில் விஜயம் செய்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் ஒரு அரச தலைவரைப் போலல்லாது சாதாரணமாக அந்த அரசியல் விவாத நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன பிரதேசத்திற்குள் அண்மைக்காலங்களில் விஜயம் செய்த அரச தலைவராக ஜனாதிபதி மைத்திரி அவர்கள் திகழ்கின்றார். இதுதொடர்பாக தம்முடைய மகிழ்ச்சியினை வெளியிட்டுள்ள இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன ஊழியர்கள் கடந்த காலங்களில் அரச தலைவர்கள் அமைச்சர்கள் தங்களுடைய அலுவலகங்களுக்கும் உத்தியோகபூர்வ வாசஸ்தலங்களுக்கும் ஒலிபரப்புக்கூட்டுத்தாப ஊழியர்களை வரவைத்து தங்களுடைய நிகழ்ச்சிகளை ஒலிபரப்பியதை நினைவு கூர்ந்தார்கள்.

இதேவேளை ஜனாதிபதியின் இந்த விஜயம் தொடர்பாக நிகழ்ச்சியின் தயாரிப்பாளர் மற்றும் சில உயரதிகாரிகளைத்தவிர ஏனையவர்கள் அறிந்திருக்கவில்லை. அந்தவகையில் ஏனையவர்களுக்கு ஜனாதிபதியின் இவ்விஜயமானது இன்ப அதிர்ச்சியாக இருந்தாக மேலும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நேரடி கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பேசிய ஜனாதிபதி, இந்நாட்டில் தன்னுடைய தலைமைத்துவத்தின்கீழ் ஜனநாயகம், மனித உரிமை விடயங்கள், பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் ஆகிய விடயங்களுக்கு முக்கியத்துவம் வழங்கி அவை தொடர்பில் அரசு என்ற ரீதியில் செயற்படுவதாக தெரிவித்துள்ளார்.Ms 01

Ms

SHARE