ஜனாதிபதி தலைமையில் கவிஞர் பீ.பி. அல்விஸ் பெரேராவின் 50வது நினைவு தினம் 

204

கவிஞர் பீ.பி. அல்விஸ் பெரேரா அவர்களின் 50வது நினைவு தினம் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் நேற்று (22) பிற்பகல் இலங்கை தேசிய நூலக சேவைகள் சபையில் இடம்பெற்றது.

இங்கு கருத்து தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், பீ.பி.அல்விஸ் பெரேரா நாட்டுக்காகவும் நாட்டு மக்களுக்காகவும் தனது கடமையினை செவ்வனே நிறைவேற்றிய ஒரு சிரேஷ்ட நபர் ஆவார் எனக் குறிப்பிட்டார். SWRD .பண்டாரநாயக்க மற்றும் சிறிமாவோ பண்டாரநாயக்க அவர்களுடன் மிக நெருக்கமாக இருந்து செயற்பட்டு 56ஆம் ஆண்டு பண்டாரநாயக்க அரசாங்கத்தை ஏற்படுத்துவதற்காக பீ.பி.அல்விஸ் பெரேரா தனது கவிதைகள் மூலம் மக்களை விழிப்படையச் செய்த விதத்தினை ஜனாதிபதி அவர்கள் இதன்போது நினைவுகூர்ந்தார்.

பீ.பி.அல்விஸ் பெரேராவின் தெரிவு செய்யப்பட்ட கவிதைகளை உள்ளடக்கிய நூல் வெளியீடு இதன்போது இடம்பெற்றதுடன், இதன் முதலாவது பிரதி, ஜனாதிபதி அவர்களிடம் கையளிக்கப்பட்டது.

சூழ்ச்சிக்காரர்களின் ஆயுதத்திற்கு பலியாகி உயிர் நீத்த பண்டாரநாயக்க அவர்களுக்காக பீ.பி.அல்விஸ் பெரேரா அன்று முழு நாட்டையும் துக்கத்தில் ஆழ்த்திய ஒரு சில கவிதை வரிகளை இதன்போது ஜனாதிபதி அவர்கள் மீட்டிக்காட்டினார்.

இலங்கையின் கவிதை களஞ்சியத்தை வளம்பெறச் செய்த பீ.பி.அல்விஸ் பெரேரா எனும் கவிஞரின் கவிதைகள் அன்று மக்களின் மனங்களை கவர்வதற்கும் மக்கள் போராட்டத்தை பலப்படுத்துவதற்கும் முக்கிய பங்காற்றியதுடன் காலணித்துவவாத யுகத்தில் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக சுதந்திரப் போராட்டத்திற்காக அவர் தைரியமாக முன் நின்றார்.

இந்நினைவு தின விழாவில் கொழும்பு, சிலாபம் பிரதான சங்கநாயக்கர்கள் களனிப் பல்கலைக்கழகத்தின் வேந்தர் சங்கைக்குரிய வெலமிட்டியாவே குசலதம்ம தேரர், பேராசிரியர் சரத் விஜயசூரிய மற்றும் கவிஞர்கள் ரசிகர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு

2016.08.23

Maithripala3-1

 

SHARE