ஜனாதிபதி நிவாரணப்பிரிவின் கீழ் மதுபாவனையிலிருந்து விடுபடுவதற்கான விழிப்புணர்வு திட்டம்

265

ஜனாதிபதி மதுபான நிவாரணப்பிரிவின் கீழ் மதுபானம், சிகரட் உட்பட மதுபாவனையிலிருந்து விடுபடுவதற்கான விழிப்புணர்வு செயற்றிட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது.

குறித்த செயற்றிட்டம் மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில், மஸ்கெலியா சாமிமலை நகரில் இன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது மதுபானம், புகைப்பிடித்தல் காரணமாக ஏற்படும் தீங்குகள் குறித்து அறிவுறுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து பொது மக்களுக்கான விழிப்புணர்வு ஊர்வலம் ஒன்றும் நடைபெற்றுள்ளது. இந்த ஊர்வலம் கவரவில சந்தியில் ஆரம்பித்து சாமிமலை நகரம் வரையும் சென்றுள்ளது.

இந்தச் செயற்திட்டத்தின் ஊடாக சிகரட் மற்றும் மதுபானப் பாவனையால் உண்டாகும் உடல், உள பிரச்சினைகள், சமூக சீர்கேடுகள், மற்றும் இவற்றை தடுப்பதற்கான முறைகள், சிகரட் மதுவற்ற எதிர்கால சமூகம், போன்றவையும் விழிப்புணர்வுப்படுத்தப்பட்டது.

இதற்கு மஸ்கெலியா பொலிஸ் அதிகாரிகள், ஆசிரியர்கள், கவரவில சிங்கள மகா வித்தியாலய மாணவர்கள், கவரவில தமிழ் மகா வித்தியாலய மாணவர்கள், ஓல்டன் தமிழ் வித்தியாலய மாணவர்கள், பெயாலோன் தமிழ் வித்தியாலய மாணவர்கள் உட்பட பெருந்திரளானோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

625.0.560.320.160.600.053.800.668.160.90 (1)

SHARE