ஜனாதிபதி – பிரதமர் இரகசிய சந்திப்பு! நடந்தது என்ன?

209

rw_my3-720x480

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் நேற்றிரவு இரகசிய கலந்துரையாடல் ஒன்றை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கோத்தபாய ராஜபக்ச மற்றும் முன்னாள் கடற்படைத் தளபதிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டமை தொடர்பாக, ஜனாதிபதி மைத்திரிபால நேற்று முன்தினம் பாதுகாப்பு அமைச்சில் உரையாற்றிய போது பகிரங்கமாக அதிருப்தி வெளியிட்டிருந்தார்.

குற்றப்புலனாய்வுப் பிரிவு, நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவு, இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு என்பன அரசியல் நிகழ்ச்சி நிரலின் கீழ் செயற்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டியிருந்தார்.

ஜனாதிபதியின் இந்த உரை, பல்வேறு தரப்புகள் மத்தி்யிலும் கடும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜேவிபி மற்றும் சிவில் சமூக அமைப்புகள் இது குறித்து ஏமாற்றமும் அதிருப்தியும் வெளியிட்டுள்ளன.

சட்டம் ஒழுங்கு அமைச்சை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொறுப்பேற்கலாம் என்றும் ஊகங்கள் வெளியாகியிருந்த நிலையில், நேற்றிரவு பிரதமருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் இரகசிய சந்திப்பு இடம்பெற்றது.

இந்தச் சந்திப்பில் சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாலக ரத்நாயக்கவும் பங்கேற்றார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே, ஜனாதிபதியின் உரை தொடர்பாக கருத்து வெளியிட மறுத்துள்ள நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவின் தலைவரான பிரதி காவல்துறை மா அதிபர் ரவி வைத்தியாலங்கார, நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவின் விசாரணைகளில் ஜனாதிபதிக்கு திருப்தி இல்லாவிடின் அதன் மீது அவரால் நடவடிக்கை எடுக்க முடியும் என்று கூறியுள்ளார்.

SHARE