முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவருடைய ஆட்சிக்காலத்தில் பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்தார். ஆனால் அவை ஒன்றிலும் வருவாய் ஈட்டித்தரவில்லை என அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்தார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே இவ்வாறு கூறினார். தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
மஹிந்த பலகோடி ரூபாய்யை முதலீடு செய்து மைதானம், விமான நிலையம், துறைமுகங்கள், பாரிய கட்டிடங்கள், தாமரைத்தடாகம் போன்றவற்றை நிர்மாணித்தார்.
ஆனால் இவற்றிலிருந்து வருமானமாக ஒரு ரூபாய் கூட கிடைக்கவில்லை. இதற்கு தம்மிடம் ஆதாரம் இருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.
பிற நாடுகளிடம் இருந்து கடன்வாங்கியே நாட்டை கொண்டு சென்றார் எனவும், அவர் பெற்ற கடனுக்கான வட்டியையே இந்த நல்லாட்சி அரசு செலுத்தி வருவதாகவும் அமைச்சர் சரத் அமுனுகம சுட்டிக்காட்டினார்.