ஜனாதிபதி மாளிகைக்குள் இயங்கிய யோஷித்தவின் தொலைக்காட்சி காரியாலயம்

281
கடந்த ஆட்சியின் போது கொழும்பு கோட்டை ஜனாதிபதி செயலகத்தில், சி.எஸ்.என். தனியார் தொலைக்காட்சியின் காரியாலம் ஒன்று செயற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக செயற்பட்ட காலத்தில், அவரது மகனான யோஷித்த ராஜபக்ஷவினால் நிர்வகிக்கப்பட்ட தனியார் நிறுவனம் ஒன்றின் காரியாலமே இவ்வாறு செயற்பட்டுள்ளது.

இந்த காரியாலயத்தில் சி.எஸ்.என். தொலைக்காட்சியில் பதிவு செய்யப்பட்ட சீ.டீ. தட்டுக்கள் 500 இற்கும் அதிகமானவையும், பாரியளவிலான கடிதங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

2015 ஜனவரி ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்த மஹிந்த ராஜபக்ஷ தரப்பினர், ஜனாதிபதி செயலத்திலிருந்து பல ஆவணங்களை அப்புறப்படுத்தியிருந்தனர். எனினும் சி.எஸ்.என் காரியாலயத்தில் இருந்த எதனையும் எடுத்துச் செல்ல முடியாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சி.எஸ்.என் தனியார் நிறுவனம், அரச சொத்துக்கள் மற்றும் முறையற்ற வகையில் பெறப்பட்ட பணத்தின் மூலமே ஏற்படுத்தப்பட்டதாக, நிதி மோசடி தொடர்பான பொலிஸ் விசாரணைப் பிரிவு மேற்கொண்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாகவும் பிரதான அரசியல் கட்சியொன்று குறிப்பிட்டுள்ளது.

SHARE