தேசிய நத்தார் விழா கொண்டாட்டங்களில் பங்கேற்பதற்காக இன்று யாழ்ப்பாணம் சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, யாழ். ஆயர் வண.ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகையைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.
யாழ். ஆயர் இல்லத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இந்தச் சந்திப்பில், அமைச்சர் ஜோன் அமரதுங்க, பிரதியமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், வடக்கு மாகாண ஆளுனர் பாலிஹக்கார உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
அதேவேளை, யாழ்ப்பாணம் சென்றுள்ள ஜனாதிபதி, கோணப்புலம் இடம்பெயர்ந்தோர் முகாமுக்கும் சென்று அங்குள்ள நிலைமையை நேரில் பார்வையிட்டதுடன், அங்கு தங்கியிருக்கும் இடம்பெயர்ந்த மக்களுடனும் கலந்துரையாடிள்ளார்.