தாய்லாந்து நாட்டிற்கு உத்தியோகப்பூர்வ விஜயத்தினை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றிரவு நாடு திரும்பினார்.
இலங்கை விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில் ஜனாதிபதி உட்பட தூதுக் குழுவினர் நேற்றிரவு இலங்கையை வந்தடைந்ததாக எமது விமானநிலைய செய்தியாளர் தெரிவித்தார்.
பாங்கொக் நகரில் நடைபெற்ற ஆசிய ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்து கொள்ள, கடந்த 7ம் திகதி ஜனாதிபதி தாய்லாந்து சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.