ஜனாதிபதி மைத்திரியை தேங்காய் துருவிக்கு ஒப்பிட்ட ரெஜினோல்ட் குரே

321
தேங்காய் துருவியை லண்டனுக்கு எடுத்துச் சென்றாலும் அதில் துருவுவது தேங்காய் எனவும் அதேபோல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எங்கு சென்றாலும் அவர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கொள்கைளுக்கு அமையவே செயற்படுவார் எனவும் முன்னாள் அமைச்சர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி எங்கிருந்தாலும் பிக்கு, வைத்திய, ஆசிரியர், விவசாயிகள், தொழிலாளர்களுக்காகவே குரல் கொடுப்பார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

கடந்த 8 மாதங்களில் இலங்கையில் நடைபெற்ற பல விடயங்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் மேற்கொள்ளப்பட்டன.

எனினும் சிலர், தமக்கு அணிய ஆடை இல்லாவிட்டாலும் நாய்களுக்கு ஆடைகளை அணிவிக்க முயற்சித்து வருகின்றனர்.

அவர்களுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன புகைப்படங்களில் போஸ் கொடுத்தாலும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வெற்றியே ஜனாதிபதியின் பிரார்த்தனையாகும் எனவும் ரெஜினோல்ட் குரே குறிப்பிட்டுள்ளார்.

SHARE