சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடும் போதோ அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
புதிய அமைச்சரவை நியமனங்கள் தொடர்பில் அங்கு கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.
நாளைய தினம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவி பிரமானம் செய்துகொள்ளவுள்ளார் எனவும், அத்தோடு அமைச்சரவை நியமனங்களும் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் கூட்டணிக் கட்சிகளின் அநீதியான தலையீடுகளைத் தவிர்க்கும் பொருட்டு கூட்டணியை கலைத்துவிட அதன் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன தீர்மானித்துள்ளார். பெரும்பாலும் எதிர்வரும் 24ம் திகதி கூட்டணியைக் கலைப்பது தொடர்பான அறிவித்தல் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
அதன் பின்னர் தேசிய அரசாங்கத்தில் இணைந்து கொள்ளவுள்ள சுதந்திரக் கட்சிக்கு பிரதிப் பிரதமர் பதவி வழங்கப்படவுள்ளது. இப்பதவிக்கு நிமால் சிறிபால டி சில்வா நியமிக்கப்படவுள்ளததாகாக தெரிய வந்துள்ளது