ஜப்பானிய பொலிஸார் மீது தாக்குதல் மேற்கொண்ட இலங்கையர்கள்

232

ஜப்பானிய பொலிஸார் மீது இலங்கையை சேர்ந்த சிலர் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஐப்பான் தலைநகர் டோக்கியோவில் இலங்கைத் தூதரகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு ஒன்றின் போது இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த வாரம் யொயோகி பூங்காவில் இலங்கை திருவிழா நடைபெற்றது. இதனை ஜப்பானிலுள்ள இலங்கைத் தூதரகம் ஏற்பாடு செய்திருந்தது.

இந்த நிகழ்விலேயே ஜப்பானிய பொலிஸார் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மது போதையில் இருந்த இலங்கையர்களே இந்தத் தாக்குலை மேற்கொண்டதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.

தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஜப்பானிய பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகிறது.

இந்த தாக்குதல் சம்பவமான இருநாடுகளுக்கும் இடையிலான ராஜதந்திர உறவில் பாதிப்பை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE