ஜப்பானில் சுற்றுலாப்பயணிகள் அதிகமாக காணப்படும் பகுதியொன்றிலிருந்து ஆறு சடலங்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.
ஜப்பானின் தென்மேற்கு பகுதியிலுள்ள பண்ணை வீடொன்றிலிருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் உட்பட ஆறு பேரின் உடல்களை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அருகிலுள்ள ஆற்றிலிருந்து மற்றுமொரு உடலை மீட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பெண்ணொருவரின் உடலை பண்ணை வீட்டிற்கு வெளியிலிருந்து மீட்டோம்,இளம் பெண் உட்பட ஐவரின் உடல்களை உள்ளேயிருந்து மீட்டோம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறிப்பிட்ட வீட்டில் வசித்தவர்கள் தொலைபேசி அழைப்பிற்கு பதிலளிக்காததை தொடர்ந்து உறவினர்கள் மேற்கொண்ட முறைப்பாட்டை தொடர்ந்தே அந்த வீட்டிற்கு பொலிஸார் சென்றுள்ளனர்.
உடல்கள் மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதியில் அச்சநிலை காணப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.