ஜப்பானில் இடிபாடுகளில் 5 நாட்களாக சிக்கியிருந்த 90 வயது மூதாட்டி உயிருடன் மீட்பு!

111

ஜப்பானில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மத்திய பகுதியில் உள்ள இஷிகாவா, நிகாட்டா, டயோமா, யமஹடா உள்ளிட்ட மாகாணங்கள் மொத்தமாக குலுங்கின.

இந்த நிலநடுகத்தால் பல இடங்களில் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இடிபாடுகளை அகற்றும் பணி தொடர்ந்து நீடித்து வருகிறது. நிலநடுக்கத்தால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 100 ஐ

தாண்டியுள்ளது.

இந்த நிலையில் நேற்றையதினம் (07-01-2023) மீட்புப் பணியாளர்கள் இஷிவாகா மாகாணம் சுஸு நகரில் இரு மாடி கட்டிடத்தின் இடிபாடுகளில் சிக்கியிருந்த 90 வயது மூதாட்டியை உயிருடன் மீட்டனர்.

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட இடிபாடுகளுக்கிடையே உணவின்றி 5 நாட்களுக்கும் மேலாக அந்த மூதாட்டி உயிருடன் இருந்தது மீட்புபடையினரை ஆச்சரியப்படுத்தியுள்ளது.

SHARE