ஜப்பானில் கனமழை:பலியானோர் எண்ணிக்கை 122

160

ஜப்பானில் பெய்து வரும் தொடர் மழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 122 ஆக அதிகரித்துள்ளது.

ஜப்பான் நாட்டில் தற்போது பலத்த மழை பெய்து வருகிறது. ஜப்பானில் உள்ள ஹிரோஷிமா, கியாட்டோ, ஒக்காயாமா, எஹிமே உள்ளிட்ட மாகாணங்களில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது.

தாழ்வான பகுதிகளில் வசித்து வந்த 50 லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டனர். அவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் மழை வெள்ளத்தில் மூழ்கியும், மண்சரிவில் சிக்கியும் பலியானோர் எண்ணிக்கை 122 ஆக அதிகரித்துள்ளது என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், காணாமல் போன 20 க்கும் மேற்பட்டோரை தேடும் பணிகளில்  மீட்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

SHARE