ஜப்பானில் தொழில் பெற்று தருவதாக கூறி ஏமாற்றிய நபர் கைது!

225

three_people_arrested_25465

ஜப்பானில் வேலை வாய்ப்பை பெற்றுத் தருவதாக கூறி பணம் மோசடி செய்த ஒருவரை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் விசேட விசாரணைப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.கண்டியில் வைத்து இந்த நபரை விசேட விசாரணைப் பிரிவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர் ஜப்பானில் தொழில் வாய்ப்பை பெற்று தருவதாக கூறி நபர்களிடம் தலா 13 லட்சம் ரூபாவை பெற்றுக்கொண்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபரின் வீட்டை சோதனையிட்ட போது அங்கிருந்து 13 கடவுச்சீட்டுக்கள், வங்கி அறிக்கைகள். பிறப்பத்தாட்சி பத்திரங்கள் என்பவற்றை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

SHARE