ஜப்பான் கார் “டட்சுன் ரெட் – கோ” கார் இலங்கை சந்தைகளில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

279

இந்தியாவில் உள்ள ஜப்பானின் நிசான் நிறுவனத்தின் கிளை நிறுவனத்தில் இருந்து தயாரிக்கப்பட்ட “டட்சுன் ரெட் – கோ” கார் இலங்கை சந்தைகளில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

இந்திய ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜப்பானின் நிசான் நிறுவனத்தின் குறித்த கிளை நிறுவனமானது இதுவரை 100 நாடுகளின் சந்தைகளில் குறித்த காரினை அறிமுகப்படுத்தியுள்ளது.

எனினும், அந்த நிறுவனமானது சுமார் 59 வருடங்களுக்குப் பிறகு தமது வர்த்தக நடவடிக்கைகளை இலங்கையுடன் ஆரம்பிக்கவுள்ளதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, அடுத்த மாதம் முதல் குறித்த கார் இலங்கையில் விற்பனை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, குறித்த காரின் விலை இந்திய ரூபாயின் படி 2.6 இலட்சம் தொடக்கம் மூன்றரை இலட்ச ரூபாய் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட கார் 800 CC எஞ்சின் , 2-DIN audio system, power steering, front power windows, LED DRLs and a driver side airbag போன்ற அம்சங்களை கொண்டது.thumbnail_cropped

thumbnail_cropped01

thumbnail_cropped02

SHARE