ஸ்ரீலங்காவிற்கு விஜயம் செய்துள்ள ஜப்பான் நாட்டு முன்னாள் பிரதமர் யஷோ புக்குடா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இந்த சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் நேற்று மாலை நடைபெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஸ்ரீலங்காவின் தற்போதைய பொருளாதார நிலைமை, ஜப்பான் – ஸ்ரீலங்காவிற்கு இடையே உள்ள நட்புறவு தொடர்பில் நீண்டநேரம் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இந்தக் கலந்துரையாடலுக்கு வெளிவிவகார அமைச்சின் செயலாளர் எசல வீரகோன், ஜப்பானிற்கான ஸ்ரீலங்கா தூதுவர் தம்மிக்க கங்காநாத் திஸாநாயக்க, கொழும்பிலுள்ள ஜப்பான் தூதுவர் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
ஜப்பான் முன்னாள் பிரதமர் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீலங்காவிற்கான விஜயத்தை மேற்கொண்டிருந்தார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனான சந்திப்பைத் தொடர்ந்து அவர் மேலும் சிலரை சந்திக்கவிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.