ஜரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் குழு இன்று கிளிநொச்சி விஜயம்

320

ஜரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் இன்று கிளிநொச்சி மாவட்டத்துக்கு விஐயம் மேற்கொண்டு, ஒன்றியத்தினால் அமைத்துக் கொடுக்கப்படவுள்ள வீட்டுத்திட்டங்கள் தொடர்பில் ஆராய்ந்துள்ளனர்.

இன்று காலை 9.30 மணியளவில் இரணைமடு குளம் அமைந்துள்ள பகுதியில் விசேட வானூர்தியில் வந்திறங்கிய குறித்த குழுவினரை, கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் வரவேற்றார்.

இந்தக் குழுவினருடன் மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளரும் வருகை தந்திருந்தார்.

வருகை தந்த குழுவினர், ஐரோப்பிய ஒன்றியத்தினால் வழங்கப்படவுள்ள வீட்டுத்திட்டங்கள் தொடர்பில் ஆராய்ந்ததுடன், மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிற்கும் விஜயம் மேற்கொண்டனர்.

சிவபுரம், புண்ணைநீராவி, பன்னங்கண்டி பகுதிகளிற்கு விஜயம் மேற்கொண்ட குழுவினர், மக்களின் நிலைமைகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டதுடன், வீட்டுத்திட்டம் வழங்குவது தொடர்பிலும் கேட்டறிந்து கொண்டனர். பின்னர் மாவட்ட செயலகத்திற்கு வருகை தந்த குழுவினர் அரசாங்க அதிபருடன் கலந்துரையாடினர்.

இதன்போது கருத்து வெளியிட்ட அரசாங்க அதிபர், வீட்டுத்திட்டம் வழங்குவது தொடர்பில் குறித்த குழுவினரின் வருகை அமைந்திருந்ததாகவும், குறித்த குழுவினரை பல்வேறு பகுதிகளிற்கு அழைத்து சென்றதாகவும்  தெரிவித்தார்.

SHARE