ஜவுளிக் கடை சிலையாக மாறிய சங்கக்காரா.. ஏன் தெரியுமா? ருசிகர வீடியோ

256

625-500-560-350-160-300-053-800-748-160-70-9

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், அதிரடி துடுப்பாட்ட வீரருமான குமார் சங்கக்காரா தற்போது உலகமெங்கும் நடக்கும் பிரிமியர் லீக் போட்டிகளில் பங்கேற்று வருகிறார்.

தற்போது சங்கக்காரா வங்கதேச பிரிமியர் லீக் டி20 தொடரில் டாக்கா டைனமிட்சஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.

இந்நிலையில் அந்த அணி வீரர்களுக்கு ஒரு சவால் கொடுக்கப்பட்டது. அதாவது ஜவுளிக் கடைகளில் வைக்கப்பட்டிருக்கும் உடையணிந்த சிலை போல் நிற்கவேண்டும்.

இந்த சவாலை ஏற்றுக்கொண்ட டாக்கா டைனமிட்சஸ் அணி வீரர்கள் அனைவரும் தாங்கள் செய்த வேலையை அப்படியே நிறுத்திக் கொண்டு சிலையாக மாறினர்.

இந்த சுவாரஸ்ய தருணத்தை டாக்கா டைனமிட்சஸ் அணி வீடியோவாக வெளியிட்டுள்ளது.

எதிர்வரும் 6ம் திகதி டாக்கா டைனமிட்சஸ் அணி முதல் தகுதிப்போட்டியில் குல்னா டைட்டன்ஸ் அணியை சந்திக்கிறது.

SHARE