ஜாம்பியாவில் ஏற்பட்ட தாமிரச் சுரங்க விபத்தில் புதைந்துபோன தொழிலாளர்களை மீட்கும் பணி 6 நாட்களாக தொடர்ந்து நடந்துவரும் நிலையில், ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.
சட்டவிரோதமாக நடைபெற்ற இந்தத் தாமிரச்சுரங்கப் பணியின்போது கனமழை காரணமாக மண்சரிவு ஏற்பட்டு விபத்தானது.
இதில் 30க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மாயமாகினர். மேலும், இறந்த ஒரு தொழிலாளரின் உடலும் மீட்கப்பட்டுள்ளதாக ஜாம்பியா பேரிடர் மேலாண்மைப் பிரிவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதைந்த சுரங்கத்திலிருந்து பல குரல்கள் கேட்பதால் மீட்புப்பணிகள் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகின்றன.