கார்த்திக் சுப்ராஜ் இயக்கத்தில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் கடந்த வாரம் திரைக்கு வந்தது
மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ள இப்படம் வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது. ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ்.ஜே. சூர்யா இருவரும் இணைந்து முதல் முறையாக இப்பாடத்தில் தான் இணைந்து நடித்தனர்.
ஜிகர்தண்டா படத்தை பார்த்த நட்சத்திரங்கள் பலரும் தங்களுடைய பாராட்டுகளை படக்குழுவிற்கு சமூக வலைத்தளங்கள் மூலம் தெரிவித்து வருகிறார்கள்.
பாராட்டிய ரஜினிகாந்த்
இந்நிலையில் ஜிகர்தண்டா படக்குழு அனைவரையும் நேரில் அழைத்து பாராட்டியுள்ளார் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.