ரஞ்சித் இயக்கத்தில் மிக விரைவில் ரஜினி நடிக்க போகிறார் என்பது தெரிந்த விஷயம்.
இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் இரண்டாவது வாரத்தில் நடக்க போகிறது என்கிறது தயாரிப்பு வட்டாரம். ஏற்கனவே பிரகாஷ்ராஜ், ராதிகா ஆப்தே, மெட்ராஸ் கலையரசன் போன்ற பிரபல நட்சத்திரங்கள் நடிக்க, தற்போது புதிதாக அட்டகத்தி தினேஷ் இணைந்துள்ளார்.
ரஞ்சித்தின் சினிமா வாழ்க்கை அட்டகத்தி தினேஷுடன் தான் தொடங்கியது, அதனாலே அவர் மேல் ரஞ்சித்துக்கு ஒரு மரியாதை, ரஜினி படத்துக்காக இவரின் கதாபாத்திரம் வடிவமைப்பில் தற்போது மும்மரமாக இருக்கிறாராம் ரஞ்சித்.
தினேஷின் கதாபாத்திரம் என்ன என்பது வெளியே கசிய விடாமல் இருக்கின்றனர். ஆனால் படம் முழுவதும் ரஜினியுடன் வருவது மாதிரியான கதாபாத்திரமாக உருவாக்கப்பட்டு இருக்கிறது என்பது மட்டும் ரஞ்சித் தரப்பில் வந்த தகவல்.