ஜிப்ஸி படத்திற்கு உலகம் முழுவதுமே குறைந்த அளவில் ஓப்பனிங்

182

ஜிப்ஸி ஜீவா நடிப்பில் கடந்த வாரம் திரைக்கு வந்த படம். இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு இருந்தது.

ஆனால், படத்தின் ரிலிஸ் தேதி தாமதம் ஆக, பலருக்கும் படம் பார்க்கும் ஈர்ப்பே குறைந்துவிட்டது.

அந்த வகையில் ஜிப்ஸி படத்திற்கு உலகம் முழுவதுமே குறைந்த அளவில் ஓப்பனிங் கிடைத்துள்ளது.

அதை விட தமிழகத்தில் படம் மிகப்பெரும் தோல்வியை நோக்கி தான் செல்கின்றதாம்.

ஆம், ஜிப்ஸி இந்த மூன்று நாட்களில் தமிழகத்தில் ரூ 3 கோடி வசூல் வந்தாலே ஆச்சரியம் தான் என கூறப்படுகின்றது.

ஜீவாவிற்கு இப்படி தொடர்ந்து படங்கள் தோல்வியடைந்து வருவது அவரின் திரைப்பயணத்திற்கு பெரும் சறுக்கலை உண்டாக்கியுள்ளது.

அதோடு, ஜீவா கண்டிப்பாக ஒரு ஹிட் கொடுத்தே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் தற்போது உள்ளார்.

SHARE