ஜிம்னாஸ்டிக் வீரருக்கு கால் உடைந்த சம்பவம் 

441

ரியோ ஒலிம்பிக் 2016ல் சனிக்கிழமை நடைபெற்ற ஜிம்னாஸ்டிக் போட்டியில் பிரான்ஸ் வீரர் சமீரின் கால் உடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் போட்டியில் இருந்து மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட சமீருக்கு ரியோவில் உள்ள மருத்துவமனயில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

தற்போது அறுவைசிகிச்சை முடிந்து நன்றாக இருப்பதாகவும், காலை ஆறு மணிக்கு மயக்கம் தெளிந்து எழுந்ததாகவும் அவரது முன்னாள் அணி வீரர் ஹாமில்டன் ட்விட்டர் இணையதளத்தில் தெரிவித்தார். அவர் காயமடைந்த வீடியோ அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

SHARE