இளைய தளபதி விஜய்-மோகன்லால் கூட்டணியில் சென்ற வருட பொங்கலுக்கு வெளிவந்த படம் ஜில்லா. இப்படம் ஓரளவு லாபத்தை கொடுத்தது.
மேலும், இப்படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய பல நாட்களாக பேச்சு வார்த்தை நடக்க, தற்போது வழக்கம் போல் டப்பிங் செய்தே வெளியிடலாம் என்று படக்குழு முடிவுக்கு வந்து விட்டதாம்.
தெலுங்கு டப்பிங்கில் இந்த படத்திற்கு பல கத்திரி விழும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஏனெனில் இப்படம் தமிழில் 3 மணி நேரம் ஓடியதால், ரசிகர்களின் பொறுமையை கொஞ்சம் சோதித்தது. இதனால் தான் இந்த அதிரடி முடிவாம்.