டார்லிங் படத்திற்கு பிறகு அறிமுக இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் நடித்துவரும் படம் த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று காலை சென்னையில் நடைபெற்றது. படத்தின் இசை மற்றும் டிரைலரை ஏ.ஆர். முருகதாஸ் வெளியிட, இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனின் தந்தை பெற்றுக் கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய தயாரிப்பாளர் காஸ்மோ.சி.ஜே. ஜெயக்குமார், கேடு கெட்ட கேவலமான கதை தான் இப்படத்தின் கதை. இப்பட இயக்குனர் இக்கதையை பல தயாரிப்பாளர்களிடம் கூறியுள்ளார், அனைவருமே மறுத்துவிட்டனர்.
நான் கூட இப்படத்தின் கதையை யோசித்து யோசித்து தான் தேர்வு செய்தேன் என்றார்.