ஜீ.வி. பிரகாஷ் கதாநாயகனாக நடிக்க தொடங்கிய படம் பென்சில். ஆனால் இப்படம் வெளிவர தாமதம் ஆனதால் அதற்குள் டார்லிங், திரிஷா இல்லனா நயன்தாரா படத்தில் நடித்து தமிழ் சினிமாவின் கவனிக்ப்படும் நாயகனாகி விட்டார்.
இப்படம் பல பிரச்சனை தாண்டி இன்று திரைக்கு வருகிறது. இப்படத்தின் இயக்குனருக்கு சம்பளமாக ஏழு லட்சம் பேசப்பட்டதாம்.
ஆனால் இப்போது ஜீ.வி.பிரகாஷின் மார்க்கெட் கூடியிருப்பதால் ரூ. 15 லட்சம் கொடுத்தால் தான் ரிலிஸ் செய்ய முடியும் என்று இயக்குனர் மணி நாகராஜ் புகார் செய்திருந்தாராம்.
படம் நன்றாக வந்திருப்பதால் தயாரிப்பாளர் பணத்தை கொடுக்க முன்வந்து இன்று ரிலிஸ் செய்கின்றாராம்.