ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை நாட்டிற்கு கிடைக்குமா? இல்லையா? என்பது குறித்து எதிர்வரும் இரு மாதங்களுக்குள் உறுதியான நிலைப்பாட்டை தெரிவிக்க முடியும்

203

ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை மீண்டும் ஸ்ரீலங்காவிற்கு பெற்றுக் கொடுப்பதற்காக ஐரோப்பிய ஒன்றியத்தினால் விடுக்கப்பட்டிருந்த 56 நிபந்தனைகள், தற்போது 15 வரை குறைக்கப்பட்டுள்ளன.

ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை மீண்டும் நாட்டிற்கு கிடைப்பதன் ஊடாக பல நன்மைகள் கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

இதன்படி, ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை நாட்டிற்கு கிடைக்குமா? இல்லையா? என்பது குறித்து எதிர்வரும் இரு மாதங்களுக்குள் உறுதியான நிலைப்பாட்டை தெரிவிக்க முடியும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

நல்லாட்சி அரசாங்கத்தின் நடவடிக்கைகள் குறித்து ஐரோப்பிய ஒன்றியம் திருப்தி அடைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதன்பிரகாரமே ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை பெற்றுக் கொடுப்பதற்கான நிபந்தனைகள் குறைக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.GSP

SHARE