ஜீ-7 மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி நாளை ஜப்பான் விஜயம்

276
ஜீ-7 மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி நாளை ஜப்பான் விஜயம் - குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு:-

ஜீ-7 மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளைய தினம் ஜப்பானுக்கு விஜயம் செய்ய உள்ளார்.

ஜப்பானின் தலைநகர் டோக்கியோவில் ஜீ-7 நாடுகள் மாநாடு இம்முறை நடைபெறவுள்ளது.

42ம் தடவையாக இந்த மாநாடு இம்முறை ஜப்பானில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உலகின் பலம்பொருந்திய நாடுகளான அமெரிக்கா, பிரித்தானியா, கனடா, பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் இந்த மாநாட்டை நடாத்துகின்றன.

28 நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியமும் இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.

உலகப் பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் இந்த மாநாட்டில் கவனம் செலுத்தப்பட  உள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமா, பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் மற்றும் ஜப்பான் பிரதமர் ஸின்சே அபே ஆகியோhர் உள்ளிட்ட உலகத் தலைவர்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

ஜப்பான் பிரதமரின் அழைப்பிற்கு அமைய இந்த மாநாட்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்கேற்க உள்ளார்.

SHARE