ஜுலை மாதம் முதல் இன்னோர் இடி! பஸ் கட்டணத்தை உயர்த்த தீர்மானம்

276

எதிர்வரும் ஜுலை மாதம் முதல் பஸ் கட்டணத்தை உயர்த்த தீர்மானிக்கப்பட்டிருப்பதாக தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

viking800x600

அரசாங்கம் கடந்த 02 ஆம் திகதி முதல் வட் வரி அதிகரிப்பை நடைமுறைப்படுத்தியதன் காரணமாக வாகன உதிரிப்பாகங்களின் விலையும் பாரியளவில் அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக தனியார் பஸ் உரிமையாளர்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளதாகவும், எனினும் தேசிய பஸ் கட்டண உயர்வுக் கொள்கை காரணமாக ஜுலை மாதம் வரை கட்டணத்தை உயர்த்த முடியாதிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தேசிய பஸ் கட்டண உயர்வுக் கொள்கையின் பிரகாரம் ஜுலை 15ஆம் திகதி முதல் பஸ் கட்டண உயர்வு நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிப்பால் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள பொதுமக்களுக்கு இது இன்னுமோர் இடியாக அமையும் என்று அஞ்சப்படுகின்றது.

SHARE