ஜுலை மாதம் முதல் கொண்டு வரப்படும் தடை

187

புகையிரத நிலையங்களிலும், புகையிரதங்களிலும் யாசகம் புரிவதை தடுப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து பிரதியமைச்சர் அசோக அபேசிங்ஹ தெரிவித்துள்ளார்.

இந்த தடையானது எதிர்வரும் ஜுலை முதலாம் திகதி தொடக்கம் அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

யாசகம் புரியும் போர்வையில் வந்து சிலர் பயணிகளின் பொருட்களை திருடிச் செல்வதாக போக்குவரத்து அமைச்சிற்கு பல முறைப்பாடுகள் சென்றுள்ளன.

இதனால் பயணிகள் அசௌகரியங்களுக்கு உள்ளாவதாக சுட்டிக்காட்டப்பட்ட நிலையிலேயே குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

SHARE