விஜய், அட்லீ கூட்டணியில் முதன்முதலாக வெளியான படம் தெறி. இன்றைய காலகட்டத்தில் சமூகத்தில் நடக்கும் முக்கியமான பிரச்சனையை மையமாகக் கொண்டு படத்தின் திரைக்கதை அமைந்திருந்ததால் பெரிய வரவேற்பை பெற்றிருந்தது.
இந்நிலையில் இப்படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட இருப்பதாகவும் விஜய் வேடத்தில் ஷாருக்கான் அல்லது அக்ஷய் குமார் நடிப்பார்கள் என்று கூறப்பட்டது.
ஆனால் தற்போது படம் ஹிந்தியில் டப் செய்யப்பட்டு முதன்முதலாக ஜுலை 1ம் தேதி இரவு 8 மணியளவில் பிரபல ஹிந்தி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட இருக்கிறது.