கபாலி படத்தில் சில நாட்களுக்கு முன் ஜெட்லீ தான் ரஜினிக்குவில்லனாக நடிக்கின்றார் என கூறப்பட்டது. ஆனால், இதை இயக்குனரே தன் டுவிட்டர் பக்கத்தில் மறுத்திருந்தார்.
இந்நிலையில் ஹாலிவுட் இயக்குனர் ஆங்லீ இயக்கிய The Wedding Banquet மற்றும் Eat Drink Man Woman ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்தவர் Winston Chao தான் இப்படத்தில் வில்லனாக நடிக்கின்றாராம்.
இதுமட்டுமில்லாமல் மலேசியா நடிகர்கள் சிலரும் இப்படத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது ரஜினி, 2.O, கபாலி என இரண்டு படங்களில் ஒரே நேரத்தில் மாறி மாறி நடித்து வருகிறார்.