அன்று தேசியத்தலைவர் பிரபாகரனின் உருவப்படத்துடத்துக்கு அருகாமையில் ஜெனிவாவில் தேசியம் பேசிய முன்னால் மாகாண சபை உறுப்பினர் மயூரன் இன்று சிங்களவரின் பிரியாவிடை வைபவத்தில்

143

 

தமிழீழ விடுதலை புலிகள் பயங்கர வாதிகள் என்று சொன்ன அந்த சிங்கள சக்திகளோடு நீங்கள் இணைந்திருகின்றீர்களா என்ற கேள்வியும் ஐயப்பாடும் எங்களுக்குள்ளேயே இருக்கிறது.

 

அன்று தேசயத்தலைவர் பிரபாகரனின் உருவப்படத்துடத்துக்கு அருகாமையில் ஜெனிவாவில் தேசியம் பேசிய முன்னால் மாகாண சபை உறுப்பினர் மயூரன் இன்று சிங்களவரின் பிரியாவிடை வைபவத்தில்

கடந்த போராட்டங்களிலே நாங்கள் மிகவும் அவதானமாக மிக நிதானமாக ஆயுத பலங்களோடு நிற்கின்ற போது எங்களை தலை குனிய வைக்கின்ற நிலையாக பிரிந்து சென்ற கருணாம்மான் எவ்வாறானதொரு படு துரோக செயலை செய்தாரோ இன்று ஐயா சம்பந்தன் ஐயாவினூடாக நாங்கள் எங்களினுடைய மக்களினுடைய உரிமைக்காக நிதானமாக சென்றிருகின்ற பொழுது இன்று அதனை குழப்புகின்ற வகையிலே பிரிந்து சென்றிருப்பதனை பார்கின்ற பொழுது கருணாம்மானுக்கும் ஈழமக்கள் புரட்சிகர முன்னணிக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது என்பதனை நான் உங்களை பார்த்து கேட்கின்றேன்.

அவர்களை துரோகிகள் என்ற ரீதியிலே அவர்களை நாங்கள் பட்டியலிட வேண்டும். அதே நேரம் இவர்கள் யாரோடு கூட்டு சேர்ந்திருகின்றார்கள். தமிழர் விடுதலை கூட்டணி, ஈழமக்கள் புரட்சிகர முன்னணி அவர்களுடைய கடந்த கால வரலாற்றை நாங்கள் பார்க்க வேண்டும். தமிழர் விடுதலை கூட்டணியினுடைய தலைவர் ஐயா ஆனந்தரி சங்கரி ஐயா 2013ம் ஆண்டு எங்களோடு மாகாண சபை தேர்தலிலே போட்டியிட்டு தமது சொந்த மாவட்டத்திலே படு தோல்வியை தழுவிக்கொண்டவர்.

2015ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலிலே ஈழமக்கள் புரட்சிகரவிடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமசந்திரன் பாராளுமன்ற தேர்தலிலே படுதோல்வியை தழுவிக்கொண்டவர்கள் தோல்விக்கு தோல்வி சரியென்று இன்று புதிதான கூட்டை ஆரம்பித்திருகின்றார்கள். நாங்கள் சற்று நிதானமாக செயற்பட வேண்டிய கட்டாயத்திலே இருக்கின்றோம்.

இன்று பல கட்சிகள் தமிழ்தேசிய கூட்டமைப்பிற்குள்ளேயே இருக்கின்றோம். ஆனால் எங்களுக்குள்ளேயே பல கருத்து முரண்பாடுகள் இருந்தாலும் தமிழ் மக்களினுடைய எதிர் பாற்பிற்காக, உரிமைக்காக, எதிர்காலத்திற்காக, எதிர்கால சந்ததியினரின் வளர்ச்சிக்காக நாங்கள் ஒற்றுமையாக பயணிகின்றோம். இந்த தேர்தலிலே நீங்கள் இடுகின்ற ஒவ்வொரு வாக்குகளும் இனி இந்த முறை எங்களை விட்டு பிரிந்து சென்றவர்களுக்கு செருப்படியாக இருக்க வேண்டும்.

தமிழ் தேசிய கூட்டமைப்பை விட்டு நீங்கள் சென்றால் இனி எந்தவொரு கட்சிகளுக்கும் அரசியல் எதிர்காலமே இல்லை என்பதை நிரூபிப்பதற்குரிய தேர்தலாக இருக்க வேண்டும். இனி யாரும் தமிழ்தேசிய கூட்டமைப்பு அண்ணன் பிரபாகரனால் உருவாக்கப்பட்ட தமிழ்தேசிய கூட்டமைப்பை உடைக்க வேண்டும் என்று யார் நினைத்தாலும் அவர்களுடைய மனங்கள் உடைந்து விட கூடாதென்ற வகையிலே அவர்களுடைய எண்ணங்களும், சிந்தனைகளும் தமிழ்தேசிய கூட்டமைப்பை பிளவு படுத்தாத பிரிக்காத வகையிலே மாறுகின்ற வகையிலே உங்களுடைய வாக்குகளை உங்களுக்காக உங்களுடைய கைகளிலே பல பீரங்கிகளே தேவையில்லை.

நாங்கள் உங்களுடைய கைகளிலே இருகின்ற வாக்கு பலத்தை நீங்கள் சரியாக பயன்படுத்துகின்ற பொழுது நாங்கள் என்னும் தமிழ்தேசிய கூட்டமைப்பினை தமிழ் மக்களினுடைய விடிவிற்காக ஒரு ஜனநாயக வழியிலே போராடுகின்ற தமிழ் மக்களினுடைய பிரதிநிதிகளாக தமிழ்தேசிய கூட்டமைப்பை ஏற்றுகொள்கின்றோம் என்று சிங்கள வல்லாதிக்கத்திற்கு பறைசாற்றுகின்ற வகையிலே உங்களுடைய வாக்கு பலத்தை சரியான முறையிலே பயன்படுத்த வேண்டும்.

எங்களை பொறுத்த வரையிலே எங்களுக்கு எதிரிகள் அதிகம் இருகின்றார்கள். ஆனால் அதைவிட எங்களைவிட்டு பிரிந்து சென்ற துரோகிகள் அதிகம் இருகின்றார்கள். சொல்லப்போனால் வடக்கு மாகாண சபையிலே கெளரவ முதலமைச்சர் தமிழ்தேசிய கூட்டமைப்பினுடைய முதலமைச்சர் இன்று தமிழ்தேசிய கூட்டமைப்பை விமர்சிக்கின்றளவிலே இருக்கின்றார். ஆனால் தமிழ் மக்கள் தமிழ்தேசிய கூட்டமைப்பு தான் தமிழ் மக்களினுடைய அரசியல் ரீதியான முன்னெடுப்பிற்கு பயந்து அவர்கள் சரியான முறையில் செயற்படுகின்றார்கள் என்பதை நிரூபிப்பதற்காக அவருக்கு வாக்களித்தார்கள். ஆனால் இன்று அவர் எதிராக செயற்படுகின்றார்கள்.

இன்று துரோகிகள் அதிகமாகி கொண்டிருகின்றது. நாங்கள் நிதானமாக செயற்படுகின்றோம். எத்தனை துரோகிகள் எங்களோடு இருந்தாலும் நாங்கள் தமிழ் மக்களினுடைய விடிவிற்காக தொடர்ந்து போராடுவோம். தொடர்ந்து பயணிப்போம் அதில் என்ற மாற்று கருத்துக்கும் இடமில்லை. இங்கே உறங்கி கொண்டிருகின்ற வீர மறவர்களுடைய கனவுகள் நனவாக வேண்டும் என்றால் நீங்கள் தமிழ்தேசிய கூட்டமைப்பிற்கு நீங்கள் உங்கள் வாக்குகளை இட வேண்டும் எனத் தெரிவித்தார்.

மாவீரர்களின் தியாகங்கள் ஒரு போதும் அரசியல் மயப்படுத்தக் கூடாது- வட மாகாண சபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன்

உணர்வு ரீதியான அஞ்சலிகளே உயிர்த்தியாகங்களுக்குரிய உண்மையான அஞ்சலியாகும் எனவ  வடமாகாண  மாகாண சபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன் தெரிவித்துள்ளார்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை(27) முல்லைத்தீவு மாவட்டம் வன்னிவிலாங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் மாவீரர் தின நிகழ்வு இடம் பெற்றது.
-இதன் போது கலந்து கொண்டு மாவீரர் தின அஞ்சலி உரை ஆற்றுகையிலேயே மாகாண சபை உறுப்பினர் செந்தில் நாதன் மயூரன்  அவ்வாறு தெரிவித்தார்.
-அவர் மேலும் உரையாற்றுகையில்,,,
முல்லைத்தீவு, மன்னார், கிளிநொச்சி மாவீரர் ஆகிய மாவட்டங்களில் உள்ள மாவீரர் துயிலுமில்லங்களில்; மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்ட போதிலும் வவுனியாவில் மாவீரர் துயிலுமில்லங்களில் இன்னமும் இரானுவமே முகாம் அமைத்து நிலை கொண்டுள்ளனர்.
அடுத்த வருடம் வவுனியா ஈச்சங்குளம் மாவீரர் துயிலுமில்லத்தில் அஞ்சலி நிகழ்வுகள் நடாத்த வவுனியா மக்களுக்கு வாய்ப்புக்கள் வழங்கப்பட வேண்டும்.
வவுனியா மாவட்ட மக்கள் சொந்த மாவட்டத்தில் அஞ்சலி செலுத்த ஏதுவாக படையினர் முகாமை அங்கிருந்து அகற்ற அரசாங்கம் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
நல்லெண்ணம் என்பது ஏட்டுச் சுரக்காய் இல்லை.
 சிறுபான்மைச் சமூகத்தின் பசியை,உணர்வை புரிந்து கொள்ளாவிட்டால் நல்லெண்ணம் என்பது வெறுமனே எழுத்துக்கோர் வையாகவோ,வாய்ச் சொல்லாகவோ இருந்து விடும்.
எமது மக்களின் உரிமைகளுக்காகவும்,சுதந்திரத்திற்காகவும் போராடி மரணித்த உறவுகள் விதைக்கப்பட்ட இடங்களிலேயே நாம் சுதந்திரமாக அஞ்சலி செய்யும் உரிமைகளை மறுக்கின்ற அரசாங்கம் எமக்கு நியாயமான, எமது தியாகங்களுக்கு ஈடான, நிரந்தர அமைதிக்கான, நிலையான, சட்டபூர்வமான அரசியல் உரிமையை வழங்குமா? என்ற சந்தேகம் இந்த நல்லாட்சி மீதும் வரத்தான் செய்கிறது.
கடந்தகால அரசாங்கங்களைப் போலல்லாமல், மீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்றாமல், விரக்தி நிலைக்கு கொண்டு செல்லாமல், அரசியல் தீர்வில் நம்பிக்கைவைக்க நல்லெண்ணத்தை வெளிப்படுத்த அரசு சகல முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் என வட மாகாணசபை உறுப்பினர் செந்தில் நாதன் மயூரன் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இப்படி எல்லாம் கூறிய இவர் இப்படி சிறுபிள்ளைத்தனமாக நடற்துகொள்வது தமிழ் மக்களை ஏமாற்றி தெரியாதவர்களுக்கு காது குத்தி பக்கம் பாடுவதை அடைநிறுத்தவேண்டும்
SHARE