ஜெயம் ரவி படத்திற்கு படம் வித்தியாசமான முயற்சிகளை மேற்க்கொண்டு வருகிறார். இவர் தற்போது போகன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
ஏற்கனவே இந்த படத்தின் கதை திருடப்பட்டது என ஒரு செய்தி உலா வருகின்றது, அது வேறு கதை. நேற்று நடந்த படப்பிடிப்பில் சண்டைக்காட்சிகள் எடுத்துள்ளனர்.
அப்போது ரவியின் தோள்பட்டையில் பலத்த அடிப்பட்டுள்ளது, ஜெயம் ரவி ஒரு கட்டத்திற்கு மேல் வலியால் துடிக்க ஆரம்பித்துள்ளார்.
பிறகு படப்பிடிப்பை ரத்து செய்து விட்டு, அவரை அருகில் இருந்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
தற்போது ஜெயம் ரவி வீட்டில் ஓய்வில் இருப்பதாக கூறப்படுகின்றது, அந்த சண்டைக்காட்சி பிறகு எடுக்கப்படுமாம்.