ஜெயலலிதாவின் வேலைக்காரி காலில் விழுவதா? சசிகலாவை பற்றி கொந்தளித்த முக்கிய பிரமுகர்

175

அதிமுக கட்சியின் அமைச்சர்கள், பெரிய தலைகள் ஆதரவுடன் சசிகலா அந்த கட்சியின் பொதுச் செயலாளர் ஆகிவிட்டார். அடுத்து தமிழகத்தின் முதல்வராக ஆக காய் நகர்த்தி வருகிறார்.

சசிகலா கட்சியின் பொதுச் செயலாளர் ஆனது கட்சியின் அடிமட்ட தொண்டர்களுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.

எப்படி ஜெயலலிதாவுக்கு கும்பிடு போட்டு மரியாதை கொடுத்தார்களோ அதே போல சசிகலாவுக்கும் அதிமுக அமைச்சர்கள் மரியாதை தருகிறார்கள்.

இது குறித்து அதிமுகவின் விசுவாசமான நிர்வாகி ஒருவர் கூறுகையில், பல போராட்டங்கள் செய்து பொதுநலத்துடன் கட்சியை வளர்த்த ஜெயலலிதாவுக்கு கொடுத்த மரியாதையை ஜெயலலிதாவிடம் வேலைக்காரியாக இருந்த சசிகலாவிற்கு கொடுக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.

வெட்கம் இல்லாமல் பதவிக்காக சசிகலா காலில் விழுவதும் அவர் செல்லும் காருக்கு கும்பிடு போடுவதும் சகித்து கொள்ள முடியவில்லை.

இதற்கெல்லாம் காலம் நிச்சயம் பதில் சொல்லும் என அந்த நிர்வாகி கொந்தளிப்புடன் கூறியுள்ளார்.

SHARE